காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவன் நகர் தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத் துறை சார்பில் இன்று உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கண்காட்சி பார்வையிட்டு, 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.7,02,788/- மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் இடுப்பொருள்கள் வழங்கினார்