குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை நடைபெற்றது. இந்த முகாமை சிறப்பு அழைப்பாளர்களாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்க்கண்டேயன் ஆகியோர் துவக்கி வைத்து மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.வித்யா விஸ்வநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.