காரங்காடு கடலோர கிராமத்தில் கிராம மக்களோடு இணைந்து வனத்துறையினர் சமூகம் சார்ந்த சுற்றுலா நடத்தி வருகிறது. இந்த சுற்றுலா தலத்தால் கிராம மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதில் முறைகேடுகள் நடப்பதாகவும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்து. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரத்தில் நடத்துவதாகவும் நள்ளிரவு நேரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அதனால் இதை மூட கோரி பொதுமக்கள் சுற்றுலா பகுதிக்குள் முற்றுகையிட்டனர்