நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக தேவப்பிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையில் நேற்று முன் தினம் தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இன்று காலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இன்றுடன் தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி முடிவடையும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்