திருச்சி மாவட்டம் முசிறி மேல வடுகப்பட்டி, அழகு நாச்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பார்த்திபன். இவருக்கு திருமணம் ஆகி அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு குடிக்கு பார்த்திபன் அடிமையானார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக அவரது வீட்டின் முன்பு விழுந்ததில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்