கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு சார்பில் இளையரசனேந்தல் ரோடு அணுகு சாலைப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகர உதவி செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.