ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் நேற்று இரவு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த சதீஷ் என்ற இளைஞரின் மீது டிராக்டர் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.மேலும் டிராக்டர் ஓட்டுனர் திட்டமிட்டு கொலை செய்ததாக கூறி இன்று மாலை இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து சதீஷின் அம்மா பேட்டி அளித்துள்ளார்.