தியாகி இம்மானுவேல் சேகரின் 68வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். அரசியல் கட்சி பிரமுகர்களை வரவேற்பதற்காக பரமக்குடி நகர் முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த பிளக்ஸ் போர்டுகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர், ஓபிஎஸ் ஆதரவு பிளஸ் போர்டுகள் உள்ளிட்டவை கிழிக்கப்பட்டிருந்தன