ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஊர்க்காவல் படையினருக்கான போட்டிகளில் பங்கேற்று மீட்பு பணி பிரிவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அவர்களை மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஊர் காவல் படையினர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.