பொள்ளாச்சியை அடுத்த மரம்புடிங்கி கவுண்டன்புதூர் கிராமத்தில் சுமார் 1,500கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊரின் மத்தியில் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் டெலிகாம் கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த கோபுரத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு கேன்சர் நோய்கள் அதிகமாக வருவதாகவும், இதனால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த கிராம மக்கள் உடனடியாக இந்த டெலிகாம்