பக்கிரிதக்கா பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா பகுதியில் இன்று ஜோலார்பேட்டை டூ திருப்பத்தூர் சாலையில் ஒருவர் சாலையைக் கடக்கும் போது அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது