தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சாதி சமயங்களை கடந்து இவருக்கு புகழஞ்சலி செலுத்துவது மட்டுமின்றி பல்வேறு மாநில மாவட்டங்களில் இருந்தும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று நடைபெற்று வருகின்ற தியாகி இமானுவேல் சேகரனார் 68 ஆவது நினைவு தினத்தையொட்டி பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பின் செய்தியாளர்களை சந்தித்தார்