செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் 1-ஆம் தேதி அதிகாலை பிரபல தொழிலதிபர் ரித்தீஷ் என்பவரது வீட்டில் 140 -சவரன் தங்க நகைகள் மற்றும் 6-லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் தாம்பரம் துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி, கூடுவாஞ்சேரி உதவி ஆணையாளர் ராஜீவ் ஆரோன் பிரின்ஸ் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்,