மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் நிகழ்ச்சி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் லாரிகள் மற்றும் மினி பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டனர். கூட்டத்திற்கு அழைத்து வந்த பொதுமக்களுக்கு டோக்கன் மூலம் பணம் விநியோகம் நடைபெற்றது. டோக்கன் வாங்குவதற்கு கூட்டத்திற்கு வந்த பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு டோக்கனை வாங்கிச் சென்றனர்.