11ஆம் தேதி பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனார் 68வது வீரவணக்க நாள் விழாவில் கலந்து கொள்ள அதிமுக நிர்வாகிகளை அனுமதிக்க மாட்டோம். அதிமுக சார்பில் நினைவிடத்திற்கு யாரும் வரும் பட்சத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு வீரவணக்க நாள் விழாவை நடத்தும் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்காது என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.