மதுரை மாவட்டம் சொக்கலிங்கபுரத்தில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தை துவக்கி வைக்க வந்த பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் சிங்கம்புணரியில் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் விஜய்யின் தவெக கட்சியை விமர்சித்தார். விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை; அவரது பேச்சு திமுகவை ஒத்திருக்கிறது. "ரிலீஸ் ஆகாத படத்தை" காட்டுகிறார், அது ஓடாது. சித்தாந்தம் திமுகவை பின்பற்றுவது போல் உள்ளது. பாசிசம் என்பதை விளக்க வேண்டும். கமல் போல் நடிகர்கள் தோல்வியடைந்த வரலாறு உண்டு எனக் கூறினார்.