திண்டுக்கல் வடமதுரை தாலுகா அய்யலூர் வனப்பகுதியில் கிராம மக்கள் செல்லும் மாமுல் பாதையை குழிப்பறித்து செல்ல வனத்துறையினர் தடை விதித்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தேவாங்குகள் சரணாலயம் இந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வனத்துறையினர் குழிகளை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி சீருடை அணிந்து பள்ளி மாணவர்களுடன் தங்கள் குடியுரிமை ஒப்படைப்பு போராட்டம்.