ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் மரகதவேல், மாவட்ட தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ஜோயல் ரெல்டன் வரவேற்றார். நவாஸ்கனி எம்பி, தேசிய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் நல்லதம்பி, அதிமுக விவசாய அணி தலைவர் மைக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்