காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வது வார்டு உட்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் உள்ள விஷ்ணு நகரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் பகுதி கழக செயலாளர் தசரதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்