திண்டுக்கல் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் எல்.பிரகாசம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தெரஸ்நாதன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ராஜகோபால்சாமி, கே.கணேசன் அண்டு கோ குழும நிறுவனத்தின் கழிவு மேலாண்மைத்துறை மேலாண்மை இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.