கிருஷ்ணகிரி மாவட்டம் ஆண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி வயது 48 இவர் கூலித்தொழிலாளி ஆவார். இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் ராமசாமி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமசாமி படுகாயமடைந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.