திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி யூனியன் கம்பிளியம்பட்டி ஊராட்சி சின்னக்காட்டுபட்டியில் முருகேசன் அழகேஷ்வரி தம்பதிகளுக்கு கஸ்தூரி (வயது 17) ஹரீஷ் (வயது 15) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மழை காலங்களில் அந்த வீட்டில் வசிக்க இயலாத நிலையில் மிகவும் சிரமத்துடன் குடியிருந்து வந்தனர். இவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் குடியிருந்த மண்குடிசை வீட்டை அகற்றிவிட்டு தற்போது சுமார் 3 லட்சம் ரூபாய் செலவிலான ஆஸ்பெட்டாஸ் கொண்ட வீடு கட்டிக் கொடுத்தனர்.