தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் மாவட்ட சுகாதார அலுவலகம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மாரிச்செல்வம் (31) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியில் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் மாரிசெல்வத்தை கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் முருகன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.