ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட பிச்சை முப்பன் வலசை மொட்டை கிழவன் வலசை கிராமத்தில் அமைந்துள்ள நீர் தேக்கு தொட்டி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த நீர் தேக்கு தொட்டி ஓட்டையாக உடைந்து உள்ளது. நீர் தேக்கு தொட்டி அருகில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது விழா காலங்களில் கிராம பொதுமக்கள் முளைப்பாரி திருவிழா நடைபெறும் பொழுது அருகாமையில் உள்ள நீர் தேக்க தொட்டி அருகே குழந்தைகள் விளையாடுவதால்நீர் தேக்க தொட்டி இடிந்து விழுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொட்டியை இடிக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்