ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த படியும் பார்க்க பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவர் இரிடியம் மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி அவரது வீட்டில் சிபிசிஐடி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து மூர்த்தியின் வீட்டில் 3.19 லட்சம் ரொக்க பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் மூர்த்தியை சிபிசிஐடி விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். சிபிசிஐடி காவல் நிலையத்தில் தொடந்து அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது