சுண்ணாம்புக்காளை அருகே பெங்களுரு பகுதியை சேர்ந்த பரத் என்ற வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்து ஒரு வீட்டின் அருகே சென்று செல்போனில் டார்ச் அடித்து பார்த்தபோது யார் என்று கேட்ட பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசி அடிக்க பாய்ந்து உள்ளான். அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி வாலிபர்கள் தட்டி கேட்டபோது அவர்களையும் தாக்க முயற்சி செய்து உள்ளான்.இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கி கையில் கயிறு கட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து உள்ளனர். இது குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.