ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 9.57 முதல் அதிகாலை 1.26 வரை சந்திரகிரஹணம் சம்பவிப்பதால் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை 8 மணியளவில் சாத்தப்பட்டது.சந்திர கிரகணம் தொடங்கியதற்கு பின் கோவிலில் இருந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் காமதேனு வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரைக்கு பவனி வந்தனர். பின்னர் அக்னி தீர்த்து கடற்கரையில் சாமி அம்பாளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம் என்தால் 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் புனித நீராடினர்