பழனி DSP.தனஞ்செயன் உத்தரவின் பேரில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பழனி அடிவாரம் பாட்டாளி தெரு அருகே கஞ்சா விற்பனை செய்த அடிவாரம் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி பாலா (எ) சைத்தான் பாலா என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்