புழுதிபட்டியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வில்லி விநாயகர் ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வியாழக்கிழமை மங்கள இசை,விக்னேஸ்வர பூஜை,மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழா,வெள்ளிக்கிழமை மூல மந்திர ஹோமம்,வேத பாராயணம்,புனித நீர் கலச புறப்பாடு,கோபுர கலச அபிஷேகத்துடன் நிறைவடைந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.