தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் பொதுப்பணி துறையின் சார்பில் புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.