சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏனாதி கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிநீர் வசதி இல்லாமல் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும், தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், இதற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.