காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய ரயில்வே நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் நகர் பகுதியில், சங்கர் என்பவர் நடத்தி வந்த கார் மெக்கானிக் கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் தீக்கிரையாயின. சங்கரின் கடையில் ஐந்துக்கும் மேற்பட்ட கார்கள் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென கடையில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. தீயை அணைக்க சங்கர் உடனடியாக முயன்றபோது, அங்கிருந்த மூன்