ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் வனப்பகுதியில் வனத்தீ ஏற்பட்டால் அதனை தடுப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் வனத்தீ குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் அளித்தனர். இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.