கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இனிப்பு கடையில் 73 கிலோ லட்டு பிள்ளையார்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் திருப்பாதிரிப்புலியூரில் இனிப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 18 வருடங்களாக கடையில் லட்டு பிள்ளையார் செய்து மூன்று நாட்கள் வைத்து படைத்து அதனை பொது மக்களுக்கு பிரசாதமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 73 கிலோ லட்டு செய்து கடையில் வைத்துள்ளார்.