புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று மாலை திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமாக அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு அவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார்.