ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வரகூர் கிராமத்தில் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி தொடர் நடைபெற்றது இந்த நிலை இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியினை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த வாலிபால் வீரர்களோடு அவர் வாலிபால் விளையாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்