பழனியில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர் பண்பாடு நாகரிகம் கலாச்சாரம் உள்ளிட்டவைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.