திருப்பத்தூர் அடுத்த கந்திலி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி பொதுவழியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது இன்று நண்பகல் அதேபகுதியை சேர்ந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். திமுக நிர்வாகி மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.