திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை ரோடு பகுதியில் கூலித்தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் காலையில் நிற்பது வழக்கம்.சின்ன பசலிக் குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தினமும் சைக்கிளில் கூலி வேலைக்காக அவசர அவசரமாக புதுப்பேட்டை ரோடுக்கு சென்றபோது எதிரே வரும் கிரேன் வருவதை கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் கிரேனின் முன் சக்கரம் சைக்கிள் மீது ஏறி இறங்கியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே தலைநசிங்கி பலியாகியுள்ளார்.