வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருந்தது இந்நிலையில் அந்த குடியிருப்பில் உள்ள பொதுமக்களை பக்கத்தில் புதியதாக கட்டியுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர் இந்த நிலையில் அவர்கள் இருந்த பழைய இடத்தில் குப்பை வண்டிகள் நிறுத்துவதற்கு செட் அடிக்கப்பட்டு வருகிறது இதனால் கொடுங்கையூர் குப்பைமேடு பகுதி போல் இந்த பகுதி ஆகிடும் என்று குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் ராம்கி நிறுவனம் அடிக்கக்கூடிய செட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்