திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் பகுதியில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட இன்று பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கந்திலி ஒன்றிய திமுக செயலாளர்கள் மோகன்ராஜ், முருகேசன் நகர்மன்ற உறுப்பினர் ஜீவிதா பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.