ராணிப்பேட்டை மாவட்டம் பாரதிநகரில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை நகர தேர்தல் பணி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை திமுக மாநில சுற்றுச்சூழல் அணியின் துணை செயலாளர் வினோத் காந்தி கலந்துகொண்டு 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்தும் தேர்தல் பணி குழுவின் பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்