மணி பட்டா வழங்கிய இடத்தை அளந்து அத்துக்காட்ட வேண்டும் என்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இச்சங்கத்தின் துணைத் தலைவர் கோ. ஆதிமூலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட மனை பட்டா இது நாள் வரையில் அளந்து அத்துக்காட்டப்படாமல் உள்ளது. எனவே அதனை அளந்து அவர்களுக்கு அத்து காட்ட வேண்டும் என்று மனு அளித்தனர்