சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 22 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடுகளுக்கு 7 மைல், சிறியவற்றுக்கு 5 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. திமுக செயலாளர், பேரூராட்சி சேர்மன் ஆகியோர் போட்டியை தொடங்கிவைத்தனர். வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.