கேரள மக்களின் வசந்த விழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது நாகர்கோவில் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஓனப்பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் அன்ன விளக்கு ஏற்றப்பட்டதை தொடர்ந்து அத்தப்பூ கோலங்களை இட்டு கேரளா பாரம்பரிய உடை அணிந்து பெண்கள் கலந்து கொண்டனர்.