வருடம் தோறும் தமிழக காவல்துறை சார்பில் காவலர் நினைவு தின நிகழ்ச்சியில் நடத்தப்படுவது வழக்கம். இந்நாளில் பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு காவல்துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர். அதன் ஒரு பகுதியை இன்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.