திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா ஆயக்குடியில் செயல்பட்டு வரும் டிடி 525 புது ஆயக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் மானிய கடன் நகை கடன் உள்ளிட்ட அரசின் திட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சங்கத்தில் செயலாளராக பணிபுரியும் பாலமுருகன் தன்னிச்சையாக தன் உறவினர்களுக்கு, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே கடன்களை வாரி வழங்குகிறார் என குற்றச்சாட்டு.