ராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். அப்பொழுது மனு அளிக்க வந்த முதியவர் ஒருவருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதனைக் கண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முதியவரை நெஞ்சில் தாக்கினார்.தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது