ஸ்ரீ நாராயண குருவின் 171 வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது மருந்துவாழ் மலையில் இருந்து முன்னதாக ஜோதி ஓட்டம் துவங்கப்பட்டு கோட்டார் பகுதியில் வந்தடைந்தது இந்த நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் நாராயண குரு பிறந்த நாள் அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிற்கும் அரசு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் நாராயண குருவிற்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்