சிவகங்கை மாவட்டம் மு.கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சாதனா (8) உயிரிழந்தார். அவரது சகோதரி கவிப்பிரியா (17) படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மேலும் தந்தை பழனியப்பன் கொடுத்த புகாரில் பேருந்து ஓட்டுநர் ரவீந்திரன் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சாதனாவின் உடலுக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.